24 மணிநேரத்துக்குள் அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு
தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்றைய தினம் உயரழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் காவல்துறைமா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது. கொம்பனித்தெரு காவல்துறை பிரிவிற்குட்பட்ட யூனியன் பிளேஸ் […]