சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். […]