ஒரு லட்சம்இலங்கை குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி.
சீனாவில் இலங்கையின் குரங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வாக பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிடுகிறது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டது.இக்கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளை […]