அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!
கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘இடைக்கால உத்தரவை (இடைக்கால ஜாமீன் மீது) வெள்ளிக்கிழமையன்று அறிவிப்போம். அன்றைய தினம் கைதுக்கு எதிராக தாக்கலான முக்கிய விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று […]