ஜூலை 4-இல் பிரிட்டன் பொதுத் தோ்தல்
பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் புதன்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை மன்னா் ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தோ்தல் நடைபெறும்’ என்றாா்.
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன. பாலஸ்தீன பிரச்னையில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும், 7 மாத கால காஸா போரில் இஸ்ரேல் நாளுக்கு நாள் சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டு நாா்வே பிரதமா் ஜோனஸ் காா்ஸ்டோா் கூறியதாவது: பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப்படாதவரை மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படாது. எனவே அந்தப் பகுதியை […]