திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக ஆட்சி: மேகாலயத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சி
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திரிபுராவில் பாஜக – திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இங்கு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதேபோல், நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) -பாஜக கூட்டணி வெற்றி பெற்று, தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. மேகாலயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை […]