ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா?
பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க, பெரும்பணம் கொடுத்து அவரை மௌனமாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]