அமைச்சுப் பதவிகளுக்குக்கு முட்டி மோதும் பொதுஜன பெரமுன: கட்சிதாவ காத்திருக்கும் ராஜித
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எஞ்சிய பத்து அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் பலர் களத்தில் குதித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் சிலரை உருவியெடுத்து அமைச்சு பதவிவழங்க ரணில் தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, அமைச்சரவை முப்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் இருபது பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில், புதிதாக பத்து அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பத்து அமைச்சுப் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் […]