Maatram

அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும்

தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், […]

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் […]