நியூசிலாந்திடம் நெதர்லாந்து ‘சரண்டர்’: ஐந்து விக்கெட் வீழ்த்தினார் சான்ட்னர்
உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தின் சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கிய நெதர்லாந்து அணி 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவில், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் 13வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தின் ராஜிவ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். முதல் மூன்று ஓவரை ‘மெய்டனாக’ வீசிய நெதர்லாந்து பவுலர்கள் துவக்கத்தில் நெருக்கடி தந்தனர். பின் எழுச்சி […]