ஈரானுக்கு பதிலடி நிச்சயம்!: இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி சூளுரை
ஜெருசலேம், ஏப். 16: தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையிலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து, தாக்குதலில் மிதமாகச் சேதமடைந்த நெவாடிம் விமான தளத்தில் ஹெர்ஸி ஹலேவி கூறியதாவது: இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. […]