ஜெருசலேம், ஏப். 16: தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையிலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து, தாக்குதலில் மிதமாகச் சேதமடைந்த நெவாடிம் விமான தளத்தில் ஹெர்ஸி ஹலேவி கூறியதாவது:
இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இருந்தாலும், தனது இந்தச் செயலுக்கான தகுந்த பதிலடியை ஈரான் நிச்சயம் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றார் அவர். “தண்டனையிலிருந்து தப்ப முடியாது’: ஜூலிஸ் ராணுவ தளத்தில் செய்தியாளர்களிடையே செவ்வாய்க்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகேரி, “இதுபோன்ற ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றாமல் எங்களால் அமைதியாக இருக்க முடியாது. தனது இந்த குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இஸ்ரேலை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில், தேர்ந்தெடுக்கும் இடத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும்’ என்றார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாடு உருவாவதை தொடக்கம் முதலே ஏற்க மறுத்துவரும் ஈரான், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அகற்றப்படவேண்டும் என்று கூறிவருகிறது. இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிடும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள், லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளித்துவருகிறது.இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிடும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள், லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளித்துவருகிறது.
இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7}ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அதற்குப் பதிலடியாக அவர்களைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இந்தப் போரில் ஹமாஸýக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாக்கள் லெபானில் இருந்தும், ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனிலிருந்தும் தாக்குதல் நடத்திவருகின்றனர்.இந்த வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிழல் யுத்தம் நீடித்துவந்தது; தொடர்ந்து சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீது இந்த மாதம் 1}ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் 2 முக்கிய தளபதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானை திருப்பித் தாக்கி பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.ஜெருசலேம், ஏப். 16: தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார்.இந்தச் சூழலிலும் ஈரானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ராணுவ தலைமைத் தளபதியும் செய்தித் தொடர்பாளரும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.