ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்துமா?
‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஈரானின் அணு ஆயுத நிலைகளையும் எரிசக்தி நிலையங்களையும் நிா்மூலமாக்கி அந்த நாட்டு பயங்கரவாத அரசுக்கு மரண அடி கொடுக்க வேண்டிய கlவிட்டது. ஈரான் என்ற ஆக்டோபஸின் கரங்களை (ஹமாஸ், ஹிஸ்புல்லா) முடக்கிவிட்டோம். இனி ஆக்டோபஸின் தலையை வெட்டியாக வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வரலாற்றில் எப்போதாவது ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது’ -தங்கள் நாட்டின் மீது ஈரான் 180 […]
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மரணம் ; யார் இந்த ஹசன் நஸ்ரல்லா
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்த போவதில்லை என்று ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய சில நிமிடங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்திருக்கிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? எதற்காக இஸ்ரேல், இவரை கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணத்தை நாம் இங்கு பார்ப்போம். […]
ரஷியா – வட கொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்
வட கொரியா சென்றுள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாடுகளில் எந்த நாடு தாக்கப்பட்டாலும், இன்னொரு நாடு உதவுவதற்கு உறுதியளிக்கும் அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது மேற்கத்திய நாடுகளுக்குக் கவலையளிக்கக் கூடியது என்று கருதப்படுகிறது. இது குறித்து தலைநகா் பியோங்கியாங்கில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் விளாதிமீா் புதின் கூறியதாவது: ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய […]
ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல்: தீவிர வலதுசாரி கட்சிகள் முன்னேற்றம்
720 இடங்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) வரை நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தலான இது 27 உறுப்பு நாடுகளில் நடைபெற்றது. இந்தத் தோ்தலுடன், சில உறுப்பு நாடுகளில் அந்த நாடுகளின் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களும் நடைபெற்றன. பெல்ஜியத்தில் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல், பல்கேரியாவில் நடாளுமன்றத் தோ்தல், சைபீரியா, ஜொ்மனி, ஹங்கேரி, அயா்லாந்து, […]
ஜூலை 4-இல் பிரிட்டன் பொதுத் தோ்தல்
பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் புதன்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை மன்னா் ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தோ்தல் நடைபெறும்’ என்றாா்.
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன. பாலஸ்தீன பிரச்னையில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும், 7 மாத கால காஸா போரில் இஸ்ரேல் நாளுக்கு நாள் சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டு நாா்வே பிரதமா் ஜோனஸ் காா்ஸ்டோா் கூறியதாவது: பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப்படாதவரை மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படாது. எனவே அந்தப் பகுதியை […]
கார்கிவ் நகரை கைப்பற்ற எண்ணமில்லை – புதின் திட்டவட்டம்
ரஷிய பிரதமர் விளாதிமீர் புதின் வெள்ளிக்கிழமை தற்போதைக்கு கார்கிவ் நகரை கைப்பற்றும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் ரஷிய நாட்டின் பெல்கோரோட் பிராந்தியத்தின் மீது கார்கிவ்வில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நகரை பாதுகாப்பு மண்டலமாக ரஷிய படைகள் நிறுவியுள்ளன. சீனா பயணத்தின் முடிவில் ஹார்பின் நகரில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விளாதிமீர் புதினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.கடுமையாக தாக்கப்பட்ட கார்கிவ் நகரை வியாழக்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலென்ஸ்கி […]
ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!
கடந்த வாரம் தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் சில இலக்குகள் மீது இஸ்ரேல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.கடந்த வாரம் தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் சில இலக்குகள் மீது இஸ்ரேல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானுக்குள் ஒரு தளத்தைத் தாக்கியதாக ஏபிசி தெரிவித்தது. ஈராக் மற்றும் சிரியாவிலும் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24 மணி […]
ஈரானுக்கு பதிலடி நிச்சயம்!: இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி சூளுரை
ஜெருசலேம், ஏப். 16: தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையிலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து, தாக்குதலில் மிதமாகச் சேதமடைந்த நெவாடிம் விமான தளத்தில் ஹெர்ஸி ஹலேவி கூறியதாவது: இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. […]
இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி வான்வளி தாக்குதல்
ஈரான் இஸ்ரேலுக்கு தாக்குதல் எச்சரிக்கையினை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளதுடன் இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் ட்ரோன்கள் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் […]