யாழில், ஆறு ஆசனங்களுக்கு 396 பேர் போட்டி !
யாழ் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும்இ 21 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் (23)மற்றும் சுயேட்சை குழுக்களால் (23) கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 396 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் […]
தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல் பிற்போடப் பட்டுள்ளது
தமிழ் கட்சிகளின் செயல் “தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்’ என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது. இன்று(06) தமிழ் மக்கள் பொதுச்சபை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் பொதுச்சபை ஈழத்தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்திற்கும் மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்குடன் உருவாகியது. ஜனாதிபதி தேர்தல் அது தன்னைப் போதியளவில் ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழ் […]
கிளிநொச்சி மதுபானசாலை விவகாரம்; சிக்கினார் விக்னேஸ்வரன்!
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலைக்கு தானே சிபாரிசுக்கடிதம் வழங்கியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசினால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானச்சாலை உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ரணில் அரசில் பல தமிழ் எம்.பிக்களும் மதுபானச்சாலை உரிமம் பெற்றதாக தகவல் வெளியானது. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி. ரெலோ உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டு […]
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு நடத்த தடை ; நீதிமன்றம் உத்தரவு!
இடைக்காலத் தடை இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று(15) இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட […]
சகல தமிழ்த் தேசியக்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரிதகதியில் முன்னெடுக்கவுள்ளேன்
2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும் எனவே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ் கட்சிகளும் தம் காட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன் இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் […]
தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கு எதிராக தனித்து நின்றுபோராடிய கஜேந்திரன் எம்.பி!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலவந்தமாக தூக்கி ஏற்றி பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் தனிநபராக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் தனிநபராக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தையிட்டியில் […]
திருகோணமலை புத்தர் சிலைக்கு பிரதிஷ்டம்,கட்சி வேறுபாடற்ற போராட்டமே உடனடித்தேவை: ந.ஸ்ரீகாந்தா
தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை, ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பித்து வைக்கவும், அதனை சாட்டாக வைத்து தமிழ்ப் பிரதேசமான வடகிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்கு முறையை மேலும் இறுக்கிக் கொள்ளும் நோக்த்துடனேணே திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ந.ஸ்ரீகாந்தா சந்தேகம் வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள, நான்கு அடி உயரமான புத்தர் சிலையுடன், இலங்கைக்கு வந்துள்ள 50 பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் […]
தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்- நீதிமன்றம்
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மல்லாகம் நீதிமன்றம் விதித்துள்ள கட்டளையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.அத்தோடு, ஒவ்வொருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும் அல்லது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியும். எனினும் குறித்த உரிமைகளை அனுபவிக்கும் போது விகாரையின் முகப்பிலோ அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் […]
இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!
தமிழர் தேசமான ஈழத்தினை , சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும், இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம் என ஐ.நா.மனித உரிமை பேரவையின் 52 ஆவது அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவித்துள்ளார். அவரது உரையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அறிக்கையை இங்கு சமர்ப்பிக்கிறேன். சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது. […]