Maatram

தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கு எதிராக தனித்து நின்றுபோராடிய கஜேந்திரன் எம்.பி!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலவந்தமாக தூக்கி ஏற்றி பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் தனிநபராக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் தனிநபராக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவ நடவடிக்கை மூலம் கபளீகரம் செய்து, சட்டவிரோமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் , இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

எனினும், தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பொலிசார் பலாத்காரமாக போராட்டக்காரர்களை வாகனத்தில் ஏற்றினர். சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.