Maatram

செம்மணி மனிதப் புதைகுழி -இதுவரை 88 என்புத் தொகுதிகள்அடையாளம் காணப்பட்டுள்ன

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின்போது ஐந்து மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டு என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 85 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 67 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.மேலும் நேற்றைய அகழ்வின்போது காப்பு வடிவிலான சான்றுப்பொருள் ஒன்றும் உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட போத்தல் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் என்பதும் உறுது செய்யப்பட்டுள்ளது. அதற்கு அருகில் நேற்று சிறுவர்களின் பாதணியை ஒத்த பொருள் ஒன்றும
அடையாளம் காணப்பட்டுள்ளது.யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ். சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம்இ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்இ சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோரும் நேற்றைய அகழ்வுப் பணியின் போது முன்னிலையாகியிருந்தனர்.