சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு
பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே […]