Maatram

ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் .

மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான ஹிஜாப்பை கட்டாயம் அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும். இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய மஹ்சா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு காவல்துறை தாக்கியதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, நாடு முழுதும் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. நாளுக்குநாள் அதிகரித்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், ஆடை கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் […]

இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய நடத்தையை கண்காணிக்கும் அதேவேளையில், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் என்று Economic Times தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் தேவேந்திர முனையை […]

இறுதி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை – ஒரு பந்து எஞ்சிய நிலையில் வெற்றியீட்டிய நியூஸி.

இலங்கைக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.  நியூஸிலாந்து வெற்றிபெற கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை இலங்கை அணியினர் வீழ்த்தி கடும் சவால் விடுத்தனர்.  குவீன்ஸ்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணிக்கு குசல் மென்டிஸ் – பெத்தும் நிஸ்ஸங்க ஜோடி 9.3 ஓவர்களில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.  பெத்தும் நிஸ்ஸங்க […]