Maatram

இறுதி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை – ஒரு பந்து எஞ்சிய நிலையில் வெற்றியீட்டிய நியூஸி.

இலங்கைக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. 

நியூஸிலாந்து வெற்றிபெற கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை இலங்கை அணியினர் வீழ்த்தி கடும் சவால் விடுத்தனர். 

குவீன்ஸ்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணிக்கு குசல் மென்டிஸ் – பெத்தும் நிஸ்ஸங்க ஜோடி 9.3 ஓவர்களில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது. 

பெத்தும் நிஸ்ஸங்க 25(25) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மென்டிஸ் 5 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 73(48) ஓட்டங்களை விளாசி இலங்கை அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றார். 

இதன்போது அவர் குசல் ஜனித் பெரேராவுடன் இணைந்து 2ஆம் விக்கெட்டுக்காக  46 ஓட்டங்கள் பகிரப்பட காரணமாக இருந்தார். 

குசல் ஜனித் பெரேரா 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 33(21) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 2 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரியுடன் 20(09) ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் ஷானக 15(08) ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது. 

பந்துவீச்சில் பென் லிஸ்டர் 2 விக்கெட்டுகளையும், அடம் மில்னே, இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

வெற்றி இலக்கான 183 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி சார்பாக சட் பௌஸ் – டிம் ஷெய்பேர்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களைப் பகிர்ந்தது. 

சட் பௌஸ் 17(18) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி டிம் ஷெய்பேர்ட் 3 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 88(48) ஓட்டங்களை விளாசி நியூஸிலாந்தின் வெற்றியீட்டும் நம்பிக்கைக்கு உயிரூட்டினார். 

டிம் ஷெய்பேர்ட் – அணித்தலைவர் டொம் லதம் ஜோடி 2ஆம் விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களைப் பகிர்ந்தது. 

அணித்தலை

ஆனாலும், நியூஸிலாந்து அணியின் மத்திய வரிசை வீரர்களும் சளைக்காமல் சவால் விடுத்தனர்.

இறுதி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை லஹிரு குமார வீசினார். 

முதல் பந்தில் அதிரடியாக சிக்ஸரடித்த மார்க் சப்மன் 2ஆவது பந்தில் அசலங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்த பந்து வைட் போலாக அமைய அதில் ஓட்டம் பெற முயன்ற ஜேம்ஸ் நீசாம் ரன்அவுட் ஆனார். 

அதுவரை களத்தில் நின்று 15(16) ஓட்டங்களைப் பெற்றிருந்த டெரில் மிச்செல் இறுதி ஓவரின் 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்

வர் டொம் லதம் தலா ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரியுடன் 31(23) ஓட்டங்களுடன் வௌியேறினார்.  

நியூஸிலாந்து அணி 16.1 ஓவரில் 154 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 3ஆம் விக்கெட்டாக டிம் ஷெய்பேர்ட் ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு மீண்டும் வெற்றி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனாலும், நியூஸிலாந்து அணியின் மத்திய வரிசை வீரர்களும் சளைக்காமல் சவால் விடுத்தனர்.

இறுதி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை லஹிரு குமார வீசினார். 

முதல் பந்தில் அதிரடியாக சிக்ஸரடித்த மார்க் சப்மன் 2ஆவது பந்தில் அசலங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்த பந்து வைட் போலாக அமைய அதில் ஓட்டம் பெற முயன்ற ஜேம்ஸ் நீசாம் ரன்அவுட் ஆனார். 

அதுவரை களத்தில் நின்று 15(16) ஓட்டங்களைப் பெற்றிருந்த டெரில் மிச்செல் இறுதி ஓவரின் 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்

எனினும், இலங்கை அணியால் வெற்றியை அடைய முடியவில்லை.

வெற்றிக்கு தேவைபட்ட 2 ஓட்டங்களை 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்ரா பெற்றுக்கொடுக்க  நியூஸிலாந்து அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்குவெற்றியீட்டியது.

இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட சர்வதேச T20 கிரிக்கெட் தொடரை 2-1 எனும் ஆட்டக்கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய 2 விருதுகளையும் டிம் ஷெய்பேர்ட் சுவீகரித்தார்.