Maatram

மணிப்பூரில் கலவரம்: ராணுவம் குவிப்பு; ஊரடங்கு அமல் – 9,000 போ் மீட்பு

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தினருக்கும், மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு தீவைக்கப்பட்டது. வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, மணிப்பூரில் ராணுவத்தினா் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை சுமாா் 9,000 போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வா் பிரேன் […]

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்- நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மல்லாகம் நீதிமன்றம் விதித்துள்ள கட்டளையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.அத்தோடு, ஒவ்வொருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும் அல்லது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியும். எனினும் குறித்த உரிமைகளை அனுபவிக்கும் போது விகாரையின் முகப்பிலோ அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.