Maatram

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்- நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்றம் விதித்துள்ள கட்டளையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, ஒவ்வொருவரும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும் அல்லது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியும். எனினும் குறித்த உரிமைகளை அனுபவிக்கும் போது விகாரையின் முகப்பிலோ அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.