Maatram

முழுமையான முற்றுகைக்குள் காசா – இஸ்ரேல் அறிவிப்பு.

காசா பிரதேசத்தை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேலிய பாதுகாப்ப அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர், உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் வினயோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின் இவ் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவ் அத்யாவசியப் பொருட்களின் பெரும்பகுதி இஸ்ரேல் ஊடாகவே காசாவிற்கு இதுவரை வழங்கப் பட்டு வந்தது. இதேவேளை ஒன்பது அமரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்பட்டுள்ளது. மேலும் பத்துக்கும் அதிகமான பிரித்தானியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இசைக் நிகழ்சி ஒன்றில் […]

நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் தயார் -இஸ்ரெலிய பிரதமர்

கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேலிய விமானப்படை நடாத்தும் தாக்குதல்களில் 400 க்கும் அதிகமான பாலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடாத்தும் தாக்குதல்களில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 100 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் […]