காசா பிரதேசத்தை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேலிய பாதுகாப்ப அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர், உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் வினயோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின் இவ் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவ் அத்யாவசியப் பொருட்களின் பெரும்பகுதி இஸ்ரேல் ஊடாகவே காசாவிற்கு இதுவரை வழங்கப் பட்டு வந்தது. இதேவேளை ஒன்பது அமரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்பட்டுள்ளது. மேலும் பத்துக்கும் அதிகமான பிரித்தானியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இசைக் நிகழ்சி ஒன்றில் நடாத்தப்பட் தாக்குதலை அடுத்து 260 இஸ்ரேலியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது., நுற்றுக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக காசாப் பிரதேசத்துக்;குள் கொண்டு செல்லப் பட்டுள்ளார்கள்.
இதில் நான்கு பேர் இஸ்ரேல் நடாத்திய வான் தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிசித்துள்ளது