Maatram

மாலத்தீவு அதிபருக்கு பெரும் சிக்கல்.. பறிபோகிறதா பதவி?

மாலத்தீவில் சீனா ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் அதிபரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது. வெறும் 5.21 லட்சம் […]

பாகிஸ்தான் முன் நாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை!

நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார். இந்த வழக்கின் பின்னணி என்ன? மார்ச் 2022-ல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் உடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடக்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாத்திற்கு அனுப்பி வைத்தார். […]