Maatram

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் ஸ்ரீதரனுக்கு எதிராக முறைப்பாடு

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இந்த முறைபாட்டை பதிவு செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராக கடமை புரிந்த எஸ்.ஸ்ரீதரன், அரசியலில் பிரவேசித்து, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். இந்த நிலையில் திடீரென கோடிக்கணக்கில் எவ்வாறு சொத்துக்களை சம்பாதித்தார் என்பது தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரி, […]

செம்மணி மனிதப் புதைகுழி -இதுவரை 88 என்புத் தொகுதிகள்அடையாளம் காணப்பட்டுள்ன

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.நேற்றைய அகழ்வின்போது ஐந்து மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டு என்புத் தொகுதிகள் […]

செம்மணி மனிதப் புதைகுழி -இதுவரை 63 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

அடையாளம் காணப்பட்ட எலும்பு எச்சங்கள் யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.   மேலும் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த […]

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்தும் ட்ரம்ப்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூடுதல் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது என்று சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும், மீண்டும் […]

பங்ளாதேஷ் – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி. இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, 77 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடியது. அணித்தலைவர் சரித் அசலங்க தனி ஆளாக விளையாடி இலங்கை அணி 244 ஓட்டங்களை பெற உதவினார். இலங்கை அணி 49.2 ஓவர்களில் ஆட்டமிழந்தது. இலங்கை கப்டன் தனது ஐந்தாவது ஒருநாள் சதத்தை எட்டினார். இது பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது சதமாகும். ஆனால் […]

உக்ரைன் மீது ரஸ்யா பாரிய வான்வழித் தாக்குதல்!

ஆளில்லா விமானங்களை ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். ரஷியா இத்தாக்குதலுக்குப் […]

யாழில், ஆறு ஆசனங்களுக்கு 396 பேர் போட்டி !

யாழ் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும்இ 21 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் (23)மற்றும் சுயேட்சை குழுக்களால் (23) கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 396 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் […]

தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல் பிற்போடப் பட்டுள்ளது

தமிழ் கட்சிகளின் செயல் “தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்’ என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது. இன்று(06) தமிழ் மக்கள் பொதுச்சபை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் பொதுச்சபை ஈழத்தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்திற்கும் மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்குடன் உருவாகியது. ஜனாதிபதி தேர்தல் அது தன்னைப் போதியளவில் ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழ் […]

ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்துமா?

‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஈரானின் அணு ஆயுத நிலைகளையும் எரிசக்தி நிலையங்களையும் நிா்மூலமாக்கி அந்த நாட்டு பயங்கரவாத அரசுக்கு மரண அடி கொடுக்க வேண்டிய கlவிட்டது. ஈரான் என்ற ஆக்டோபஸின் கரங்களை (ஹமாஸ், ஹிஸ்புல்லா) முடக்கிவிட்டோம். இனி ஆக்டோபஸின் தலையை வெட்டியாக வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வரலாற்றில் எப்போதாவது ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது’ -தங்கள் நாட்டின் மீது ஈரான் 180 […]

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. சந்திப்பின் போது, ​​இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தார். “இந்தியா-இலங்கை உறவுகளுக்கான அவரது அன்பான உணர்வுகளையும் வழிகாட்டுதலையும் பாராட்டுகிறேன். இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் […]