Maatram

வடக்கில் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறார் ரணில்.

நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) காணி உறுதிகளை வழங்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற் கட்டமாக 372 பயனாளிகளுக்கான இன்று ரணில் விக்ரமசிங்கவால் காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வானது இன்று (24) யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது. ரணில் நடவடிக்கை வடக்கு மாகாண […]

ஜூலை 4-இல் பிரிட்டன் பொதுத் தோ்தல்

பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் புதன்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை மன்னா் ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தோ்தல் நடைபெறும்’ என்றாா்.

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன. பாலஸ்தீன பிரச்னையில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும், 7 மாத கால காஸா போரில் இஸ்ரேல் நாளுக்கு நாள் சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டு நாா்வே பிரதமா் ஜோனஸ் காா்ஸ்டோா் கூறியதாவது: பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப்படாதவரை மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படாது. எனவே அந்தப் பகுதியை […]

கார்கிவ் நகரை கைப்பற்ற எண்ணமில்லை – புதின் திட்டவட்டம்

ரஷிய பிரதமர் விளாதிமீர் புதின் வெள்ளிக்கிழமை தற்போதைக்கு கார்கிவ் நகரை கைப்பற்றும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் ரஷிய நாட்டின் பெல்கோரோட் பிராந்தியத்தின் மீது கார்கிவ்வில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நகரை பாதுகாப்பு மண்டலமாக ரஷிய படைகள் நிறுவியுள்ளன. சீனா பயணத்தின் முடிவில் ஹார்பின் நகரில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விளாதிமீர் புதினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.கடுமையாக தாக்கப்பட்ட கார்கிவ் நகரை வியாழக்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலென்ஸ்கி […]

அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பாங்க.

லக்னோ: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள்; கடவுள் ராமர் மீண்டும் கூடாரத்துக்குதான் போய்விடுவார் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தங்கத்தை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும்; 2 எருமைகள் வைத்திருந்தால் ஒரு எருமையை முஸ்லிம்களுக்கு பிரித்து கொடுக்கும்; […]

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ‘இடைக்கால உத்தரவை (இடைக்கால ஜாமீன் மீது) வெள்ளிக்கிழமையன்று அறிவிப்போம். அன்றைய தினம் கைதுக்கு எதிராக தாக்கலான முக்கிய விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று […]

பா.ஜ., 275 இடங்களில் வெற்றி பெறும் ஆனால், மோடி பிரதமர் ஆக வாய்ப்பில்லை

இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால், கடந்த முறை போல் மெஜாரிட்டிக்கும் கூடுதலான இடங்கள் கிடைக்காது. இந்த முறை 275 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டுமே, தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், மோடி தான் பிரதமர் என்று உறுதியாக கூற முடியாது. பா.ஜ., – எம்.பி.,க்கள் ஒன்றாக கூடி, பெரும்பான்மையாக யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ, […]

இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு

இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பு, 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 தொகுதிகளில் இன்று(19) நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் மொத்தமாகவுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 39 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் 950 […]

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

கடந்த வாரம் தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் சில இலக்குகள் மீது இஸ்ரேல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.கடந்த வாரம் தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் சில இலக்குகள் மீது இஸ்ரேல் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானுக்குள் ஒரு தளத்தைத் தாக்கியதாக ஏபிசி  தெரிவித்தது. ஈராக் மற்றும் சிரியாவிலும் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24 மணி […]

ஈரானுக்கு பதிலடி நிச்சயம்!: இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி சூளுரை

ஜெருசலேம், ஏப். 16: தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையிலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து, தாக்குதலில் மிதமாகச் சேதமடைந்த நெவாடிம் விமான தளத்தில் ஹெர்ஸி ஹலேவி கூறியதாவது: இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. […]