நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து, டிக்ளேர் செய்துள்ளது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 2 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது.
இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தனது 13வது இன்னிங்ஸில் ஐந்தாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களை பெற்றிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார். டினேஸ் சந்திமால் 116 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் க்ளென் பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை கைப்பற்றினார்.இலங்கை தேனீர் இடைவேளையின் பின்னர் 602/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, ரொம் லதத்தை ஆரம்பத்திலேயே இழந்துள்ளது. அவர் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.