Maatram

இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி வான்வளி தாக்குதல்

ஈரான் இஸ்ரேலுக்கு தாக்குதல் எச்சரிக்கையினை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மொத்தம் 50 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளதுடன் இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் ட்ரோன்கள் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் […]

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய ஞானசாரருக்கு 4 வருட சிறைத் தண்டனை

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குரகல புராதன பௌத்த மடாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட […]

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

ராபா விவகாரம் குறித்த முரண், நட்பு நாடுகளுக்கு இடையேயான விரிசல்களில் மற்றுமொன்று எனத் தெரிவித்தவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். காஸாவில் போர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான மத்திய காஸாவுக்கு மக்களை இடம்பெயர செய்ய அறிவுறுத்தும் திட்டம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் பகுதிக்கும் மேற்பட்ட மக்கள் ராபாவின் தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ள நிலையில், போரில் இருந்து மக்கள் […]

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம்  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிyில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காசாவில் தொடரும் ஐந்து மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. முந்தைய வரைவுகளை வீட்டோ செய்த இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா இந்த வரைவில் வாக்களிக்கவில்லை. மற்ற 14 உறுப்பினர்களும் இஸ்லாமிய புனித மாதமான ரமழானுக்காக “உடனடியாக போர்நிறுத்தம் கோரும்” தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்தத் தீர்மானம், “நீடித்த, நிலையான போர்நிறுத்தத்திற்கு” இட்டுச் செல்லும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது மற்றும் ஒக்டோபர் 7 […]

மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

மதுரை பாஜக பிரமுகர் சசிகுமார் இல்ல திருமண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் நயினார் நகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெறுவது குறித்தெல்லாம் நான் விசாரணை செய்யவில்லை.எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. தமிழகத்தில் திமுக, பாஜக என களம் மாறியுள்ளதாக எல்லோரது கனவு. அது நடக்குமா என்றால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அனைத்து […]

5-ஆவது முறையாக ரஷிய அதிபராகிறாா் புதின்

ரஷிய அதிபராக புதின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா். இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷியாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு அதிபா் புதினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது. புதினை தீவிரமாக எதிா்த்து […]

35 சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையால் கைது

மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது. கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை […]

உலகளாவிய அணு ஆயுதப் போா்: நேட்டோவுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு அளவுக்கு அதிகமாகத் தலையிட்டால் அது உலகளாவிய அணு ஆயுதப் போா் வெடிப்பதற்குக் காரணமாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இது குறித்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது: உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் பங்கேற்பு வரம்புக்குள்பட்டதாக இருக்கவேண்டும். அதனை மீறி அந்தப் போரில் அந்நாடுகள் தலையிடுவது, உலகளாவிய அணு ஆயுதப் போா் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகள் மீது […]

போரின் போக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக மாறுகிறதா?

ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி. இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் […]

இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி முறையே 445 ரன்கள் மற்றும் 430 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி 430 ரன்களில் டிக்ளேர் செய்ய இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது […]