இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார்.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குரகல புராதன பௌத்த மடாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த அறிக்கை வேண்டுமென்றே கூறப்பட்டதாக வழக்கு விசாரணையின் போது தோன்றுவதாகவும், அதை தற்செயலாக கூறியதாக கருத முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். வழக்கு விசாரணையின் போது கிடைத்த சாட்சியங்களை கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வீதம் 4 வருட சிறைத்தண்டனையும், தலா 50,000 ரூபா அபராதம் வீதம் 100,000 ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை தொடர்ந்து ஞானசாரர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஆர் பிரிவில் சிறையில் அடைக்கப்படுவார். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவும் இதே பிரிவிலேயே அடைக்கப்பட்டிருந்தார். நவம்பர் 1, 2016 மற்றும் டிசம்பர் 16, 2016 காலப்பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசாரார்.ஞானசாரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஆசாத் சாலி செய்த முறைப்பாட்டையடுத்து, குற்றவியல் சட்டத்தின் 296 (பி) பிரிவின் இரண்டு பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.