ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா?
பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க, பெரும்பணம் கொடுத்து அவரை மௌனமாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
இம்ரான் கான் பிணையில் வெளிவர முடியாத இரண்டு பிடியாணைகள்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பிணையில் வெளிவர முடியாத இரண்டு கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டன. பெண் நீதிபதியை அச்சுறுத்தியது உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகததை தொடர்ந்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 70 வயதான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு வஜிராபாத்தில் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் தப்பித்தார். தற்போது காயங்களில் இருந்து மீண்டு வருகிறார். அத்துடன் பல வழக்குகளில் விசாரணையைத் தவிர்த்துவிட்டார். இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் […]
நூற்றாண்டின் பேரழிவு: இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் உயிரிழப்பு!
நூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், மீட்பு பணிகள் தொடருவதால் பேரழிவின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களைத் தேடி வருகின்றனர், ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணிநேரம் ஆகியுள்ளதால் அதன் நம்பிக்கை குறைந்து வருகின்றது. உறைபனி நிலைமைகள் ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன, அவர்கள் இப்போது தங்குமிடம், […]
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் […]
சிறுத்தை-2 (Leopard-2) ரக யுத்த டாங்கிகளை உக்கிரைனுக்கு வழங்க ஜெர்மனி சம்மதித்தது
நேட்டோ நட்பு நாடுகளின் தொடர்ச்சியான இராஜதந்திர அழுத்தத்திற்குப் பின்னர் உக்ரைனுக்கு தன் வசமுள்ள படைக்கலன் களில் இருந்து 14 சிறுத்தை-2 (Leopard -2) ரக யுத்த டாங்கிகளை உக்கிரைனுக்கு அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்தது. ஆயத ஏற்றுமதியில் மிகவும் கடினமான கொள்கையை கொண்டிருக்கும் ஜெர்மனி நீண்ட இழுபறிக்குப் பின்னர் சம்மதித்திருப்பதை சரியான முடிவு என உக்ரையின் வரவேற்றுள்ளது. மேலும் போலந்து போன்ற ஏனய நட்பு நாடுகளுக்கு ஜெர்மனி வழங்கியிருந்த சிறுத்தை 2 ரக டாங்கிகளை மீழ் ஏற்றுமதி செய்வற்கு […]
ஈரானிய முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் தூக்கிலிடப்பட்டார்.
பிரிட்டன்-ஈரானிய இரட்டை நாட்டவரான அலிரேசா அக்பரி, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு உளவு பார்த்ததன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டார் என்பதை நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை காலை உறுதிப்படுத்தியது. உளவுத்துறையை அனுப்புவதன் மூலம் நாட்டின் உள் மற்றும் வெளி பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்ததற்காக அக்பரிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரிட்டிஷ் உளவு சேவையின் நடவடிக்கைகள் குற்றவாளியின் மதிப்பையும், அவர் அணுகுவதற்கான முக்கியத்துவத்தையும், எதிரிகள் அவர் மீது வைத்திருக்கும் […]
உளவுத்துறை ரகசிய கோப்புகள் தனியார் இடத்தில் கண்டுபிடிப்பு: சங்கடத்தில் வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய புதிய தொகுப்பை இரண்டாவதாக மற்றுமோர் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர். பைடன் துணை அதிபராக இருந்த பிறகு பயன்படுத்திய ஆவணங்களின் முதல் தொகுப்பு, வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. ரகசிய கோப்புகளைத் தவறாகக் கையாண்டதாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படவுள்ளது. பைடன் […]
ஆங் சான் சூகிக்கு இராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை!
மியான்மரில் பெப்ரவரி 2021 இல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து, இராணுவ ஆட்சி அமலானது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூ கி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற நீதிமன்ற அமர்வில், சூ கி, மியான்மரின் தலைவராக இருந்தபோது ஹெலிகாகொப்டரை குத்தகைக்கு எடுத்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பான குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளித்தது.இத்துடன் அவருக்கு எதிரான கடைசி வழக்குகளை முடித்து வைத்தது.இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில் உள்ள நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை […]
உக்ரைனிற்கு பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்க தயாராகிறது அமெரிக்கா!
ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு இன்னும் வலுவான ஆயுதங்களை விரும்பும் உக்ரைனின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, அதன் அதிநவீன பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா இறுதி செய்து வருகிறது. அமெரிக்கா நாளை வியாழன் அளவில் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை வழங்குவது பற்றிய முடிவை அறிவிக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்கள் செவ்வாயன்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அமெரிக்க பாதுகாப்பு […]
புதிய பங்காளிகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்: புடின்
மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, கிழக்கு அண்டை நாடுகளுக்கு எரிவாயு பாய்ச்சலை மாற்றுவது உட்பட, புதிய பங்காளிகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை ரஷ்யா விரிவுபடுத்தும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகளை முறியடிக்க ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பங்காளிகளுடன் பொருளாதார உறவுகளை வளர்த்துக்கொள்ளும் என்று புடின் தொலைக்காட்சி உரையில் கூறினார். “தளவாடங்கள் மற்றும் நிதித்துறையில் உள்ள கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்குவோம். பொருளாதாரத் தடைகளை […]