நேட்டோ நட்பு நாடுகளின் தொடர்ச்சியான இராஜதந்திர அழுத்தத்திற்குப் பின்னர் உக்ரைனுக்கு தன் வசமுள்ள படைக்கலன் களில் இருந்து 14 சிறுத்தை-2 (Leopard -2) ரக யுத்த டாங்கிகளை உக்கிரைனுக்கு அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்தது. ஆயத ஏற்றுமதியில் மிகவும் கடினமான கொள்கையை கொண்டிருக்கும் ஜெர்மனி நீண்ட இழுபறிக்குப் பின்னர் சம்மதித்திருப்பதை சரியான முடிவு என உக்ரையின் வரவேற்றுள்ளது. மேலும் போலந்து போன்ற ஏனய நட்பு நாடுகளுக்கு ஜெர்மனி வழங்கியிருந்த சிறுத்தை 2 ரக டாங்கிகளை மீழ் ஏற்றுமதி செய்வற்கு விதித்திருந்த தடையையும் தளர்த்தியுள்ளது. இதன் மூலம் நேட்டே நாடுகளின் வசமுள்ள 2000 சிறுத்தை ரக டாங்கிகளில் இருந்து கணிசமான பகுதி உக்ரைனுக்;கு வழங்கு வதற்கான கதவுகள் திறக்கப் பட்டுளது. இதை விட பிரித்தானியா தனது சலன்ஞர் (Challenger-2) ரக டாங்கிகளையும் அமரிக்கா தனது ஏப்ராம்ஸ் (Abrams ) ரக டாங்கிகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. மொத்தத்தில் வருகின்ற வசந்தகால ஆரம்பத்தில்; முன்னெடுக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகின்ற ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்கான முஸ்தீபுகள் துரிதகதியில் முன்னெடுக்கப் படுவதாக தோன்றுகிறது