மியான்மரில் பெப்ரவரி 2021 இல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து, இராணுவ ஆட்சி அமலானது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூ கி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற நீதிமன்ற அமர்வில், சூ கி, மியான்மரின் தலைவராக இருந்தபோது ஹெலிகாகொப்டரை குத்தகைக்கு எடுத்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பான குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளித்தது.இத்துடன் அவருக்கு எதிரான கடைசி வழக்குகளை முடித்து வைத்தது.இராணுவத்தால் ஆளப்படும் மியான்மரில் உள்ள நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.