ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தார். “இந்தியா-இலங்கை உறவுகளுக்கான அவரது அன்பான உணர்வுகளையும் வழிகாட்டுதலையும் பாராட்டுகிறேன். இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் […]
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்: பிரதமர் தெரிவிப்பு
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார். செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளுமெனவும், இதனை அரசாங்கமும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பொறுப்பற்ற வகையில் தெரிவிக்கப்படும் கருத்துகள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படாத விடங்களை முன்வைத்து, நாட்டில் குழப்பமான நிலையை தோற்றுவிக்கின்றமையானது, ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
வடக்கில் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறார் ரணில்.
நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) காணி உறுதிகளை வழங்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற் கட்டமாக 372 பயனாளிகளுக்கான இன்று ரணில் விக்ரமசிங்கவால் காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வானது இன்று (24) யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது. ரணில் நடவடிக்கை வடக்கு மாகாண […]
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய ஞானசாரருக்கு 4 வருட சிறைத் தண்டனை
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குரகல புராதன பௌத்த மடாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட […]
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது.
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். இதனையடுத்து, அவரிடம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட […]
பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (18) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப […]
உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் இரத்து : திடீரென பறந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், பல உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு திடீரென நாடு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அவர் திடீரென நாடு திரும்பியது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, உடன் இந்திய வெளியுறவு அமைச்சர், முன்னாள் அதிபரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டு திடீரென நாடு திரும்பியதாக குறித்த […]
அமெரிக்க தூதுவருக்கு இலங்கையில் புதிய சிக்கல்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கு எதிராக தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பால் இன்று வெளிவிவகார அமைச்சில் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இந்த நாட்டின் அமெரிக்க தூதுவர், எமது உள்நாட்டு விவகாரங்களில் பாரிய அளவில் தலையீடு செய்கின்றார். அதேபோன்று இந்த நாட்டின் அரசியல் எவ்வாறு […]
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்டுதல்
இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் நடத்தும் பேச்சுக்கள் சற்று முக்கியத்துவம் பெறுகின்றன. ரணில் விக்ரமசிங்க தனது லண்டன் சந்திப்புகள் மற்றும் பயணத்திற்கு பின்னர் நகர்த்தும் ஒரு முக்கியமான சந்திப்பு இதுவாகும். எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் நடத்த திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு முன்னோடியாக இந்த நகர்வு இடம் பெறுவதாகவும் கருதப்படுகின்றது. […]
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் […]