Skip to main content

Maatram

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது.

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.  இதனையடுத்து, அவரிடம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.