மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், பல உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு திடீரென நாடு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர் திடீரென நாடு திரும்பியது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
எனினும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, உடன் இந்திய வெளியுறவு அமைச்சர், முன்னாள் அதிபரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டு திடீரென நாடு திரும்பியதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவுடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் அரசியல் நிலவரம், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள், எதிர்வரும் அதிபர் தேர்தல் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்நிறுத்தவுள்ள வேட்பாளர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.