Maatram

நியூசிலாந்திடம் நெதர்லாந்து ‘சரண்டர்’: ஐந்து விக்கெட் வீழ்த்தினார் சான்ட்னர்

உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தின் சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கிய நெதர்லாந்து அணி 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவில், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் 13வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தின் ராஜிவ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.  முதல் மூன்று ஓவரை ‘மெய்டனாக’ வீசிய நெதர்லாந்து பவுலர்கள் துவக்கத்தில் நெருக்கடி தந்தனர். பின் எழுச்சி […]

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது […]

இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி!

பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரண 32 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்தநிலையில், 165 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணிசார்பில் அதிகபடியாக, சரித் அசலங்க 62 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், பங்களாதேஸ் அணியின் ஷகிப் அல் ஹசன் 29 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நேபாளத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி அபார வெற்றி

இந்த போட்டியில் பாகிஸ்தான் 238 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுகளை இழந்து 342 ஓட்டங்களை பெற்றது. பெறுமதிமிக்க இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம், 109 பந்துகளில் 10 – பௌண்டரிகளுடன் தனது 19வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அணித் தலைவருக்கு ஆதரவை வழங்கிய இப்திகா அகமது 67 பந்துகளில் சதம் விளாசினார், பாபர் […]

சவூதி அணியில் லயோனல் மெஸ்ஸி?

ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, சவூதி அரேபியாவை அடிப்படையாகக் கொண்ட கிளப் ஒன்றில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மெஸ்ஸிக்கு சுமாா் ரூ.4,796 கோடி வரை கொடுப்பதற்கு அந்த கிளப் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் வா்த்தகத்தை பிரதானமாகக் கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகள், சமீப காலத்தில் விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது இதற்கு உதாரணம். கால்பந்து, கிரிக்கெட்டில் கிளப்புகள் […]

இறுதி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை – ஒரு பந்து எஞ்சிய நிலையில் வெற்றியீட்டிய நியூஸி.

இலங்கைக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.  நியூஸிலாந்து வெற்றிபெற கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை இலங்கை அணியினர் வீழ்த்தி கடும் சவால் விடுத்தனர்.  குவீன்ஸ்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணிக்கு குசல் மென்டிஸ் – பெத்தும் நிஸ்ஸங்க ஜோடி 9.3 ஓவர்களில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.  பெத்தும் நிஸ்ஸங்க […]

இந்தியா vs ஆஸ்திரேலியா: அஷ்வின் வீழ்த்திய 450 விக்கெட்டுகள் – புது சாதனை

இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் இன்றைய தினம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.  சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார். இன்றைய தினம்  நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளை இழக்கும் வரை அஷ்வினுக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. முதல் பத்து ஓவர்களில் […]

அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நேர் செட்களில் (6-3, 7-6, 7-6) தோற்கடித்தார். ஜோகோவிச்சிற்கு இது பத்தாவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம். ஒட்டுமொத்தமாக அவரது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். 24 வயது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை சுதாகரிக்க அவகாசம் வழங்காமல் ஜோகோவிச் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிகளில் தோல்வியடையாத வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த வெற்றி நோவாக்கை […]

இறுதிச் சுற்றில் நுழைந்து சானியா-போபண்ணா சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கலப்பு இரட்டையா் இறுதிச் சுற்றில் நுழைந்து சாதனை படைத்துள்ளனா் தரவரிசையில் இல்லாத சானியா மிா்ஸா-ரோஹன் போபண்ணா இணை. இதன் மூலம் 7-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பு சானியாவுக்கு கிட்டியுள்ளது. இந்தியான் நட்சத்திர வீராங்கனையும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான சானியா மிா்ஸா, ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாா். இந்நிலையில் மகளிா் இரட்டையா் பிரிவில் தோல்வியுற்ற நிலையில், கலப்பு இரட்டையா் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து அசத்தலாக ஆடி வருகிறாா். தரவரிசைப் பட்டியலில் […]

இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்து

எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தின் முக்கால் பகுதி நேரம் வரை விரைந்து சென்று கொண்டிருந்த இந்திய அணி கடைசியில் தோற்றுப் போனதால் அதன்  ஹாக்கி உலகக் கோப்பை கனவு தகர்ந்து போனது. ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட், சடன் டெத் முறையில் இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் இரு அணிகளும் […]