2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதின. பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஸ் அணி வெற்றி பெற்றது. இதற்கமைய, அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி அந்த அணி 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில், அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 89 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய பங்களாதேஸ் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரண 32 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்தநிலையில், 165 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக, சரித் அசலங்க 62 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், பங்களாதேஸ் அணியின் ஷகிப் அல் ஹசன் 29 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.