ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.
கடந்த ஒரு தசாப்தமாக ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளராக செயல்பட்ட 47 வயதான அலெக்ஸி நவால்னி; பூமியின் குளிர் மிக்க வட துருவப் பகுதியில் அமைந்துள்ள ஆர்டிக் தண்டனை காலனி சிறையில் மரணம் அடைந்துள்ளதாக டாஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அலக்ஸே நவால்னி ரஷ்ய அதிபர் புதினின் தீவிர விமர்சகராகப் பார்க்கப்படுகிறார். ரஷ்ய அதிகார மையத்தின் ஊழல்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அம்பலப்படுத்தி வருகிறார். இவரது விசாரணை வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. […]
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு நடத்த தடை ; நீதிமன்றம் உத்தரவு!
இடைக்காலத் தடை இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று(15) இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட […]
விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு
டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா – பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர். காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை […]
புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு
ODI வடிவத்தில் இலங்கைக்காக 200 ஓட்டங்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையை பதும் நிசங்க (Pathum Nissanka) படைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க, அந்நாட்டு கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்தார். முதல் இரட்டை சதம் – புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான் உள்ளிட்டோர் தோட்ட உச்சத்தை கடந்து நிசங்க புதிய சாதனையை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் […]
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது.
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். இதனையடுத்து, அவரிடம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட […]
மாலத்தீவு அதிபருக்கு பெரும் சிக்கல்.. பறிபோகிறதா பதவி?
மாலத்தீவில் சீனா ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் அதிபரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது. வெறும் 5.21 லட்சம் […]
பாகிஸ்தான் முன் நாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை!
நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார். இந்த வழக்கின் பின்னணி என்ன? மார்ச் 2022-ல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் உடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடக்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாத்திற்கு அனுப்பி வைத்தார். […]
ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் – இந்திய கடற்படை விரைவு
ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, “அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி […]
மீண்டும் கட்சி தாவுகிறாரா பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் ?
தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் திட்டமிட்டபடி சரியாக சென்று, எல்லாமே கச்சிதமாக அமைந்து விட்டால், வரும் … இந்தியா” கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணைய நிதிஷ் குமார் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார் கடந்த காலங்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறார் என்பது குறித்து பார்க்கலாம். பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் […]
காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டனர்
திங்கட்கிழமை தெற்கு காசாவில் இடம் பெற்ற மோதலில் 24 படை வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது காசாவில் போர் மூண்டதற்க்கு பின்னர் ஒரே நாளில் அதிகபட்சமான வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும். பயங்கரவாதிகளின் கட்டுமானங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுத்த தாங்கி ஒன்றின் மீது நடாத்தப்பட்ட சுPபு தாக்குதலில் 21 வீரர்கள் பலியானதாகவும் இரண்டாவது சம்பவத்தில் கட்டிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய […]