சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இலங்கைக்கான கடன் வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்தார். இலங்கை தனது கடனை மறுசீரமைப்பதற்கும், சாதாரண பரிவர்த்தனைகளை மீண்டும் தொடங்குவதற்கும் இலங்கைக்கு திறன் உள்ளது என்பதற்கான சர்வதேச சமூகத்தின் உத்தரவாதமாக இந்த கடன் வசதி உதவுகிறது என்றார்.
அந்தியச் செலவாணியின் கையிருப்பு அதிகரிக்க படிப்படியாக இறக்குமதி கையிருப்புக்களை நீக்க முடியுமென்றார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (22) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.