இன்று (செப்டம்பர் 22 ஆம் தேதி) சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருந்தது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது.
நிலாவில் சூரியன் உதித்தது. ஆனால் விக்ரம் லேண்டர் அதன் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை.
நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொண்டது. ஆனால்இ சிக்னல் கிடைக்கவில்லை.
விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தனது பணியை முடித்துவிட்டு செப்டம்பர் 4ஆம் தேதியன்று லேண்டரும் ரோவரும் உறக்க நிலைக்குச் சென்றன. இருப்பினும் தொடர்புகொள்ளும் முயற்சி தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மற்றும் அதில் உள்ள பிரக்யான் ரோவர் ஆகியவை 14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை.சந்திரனின் மேற்பரப்பில் ஒரு நாள் (சந்திர நாள்) என்பது பூமியில் சுமார் 28 நாட்களுக்கு சமம். அதாவது சந்திரனில் சுமார் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவாக இருக்கும்.