Maatram

காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டனர்


திங்கட்கிழமை தெற்கு காசாவில் இடம் பெற்ற மோதலில் 24 படை வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது காசாவில் போர் மூண்டதற்க்கு பின்னர் ஒரே நாளில் அதிகபட்சமான வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும். பயங்கரவாதிகளின் கட்டுமானங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுத்த தாங்கி ஒன்றின் மீது நடாத்தப்பட்ட சுPபு தாக்குதலில் 21 வீரர்கள் பலியானதாகவும் இரண்டாவது சம்பவத்தில் கட்டிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு ராணுவ கேப்டனும் இரண்டு மேஜர் தர அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதே சமயம் அக்டோபர் 7ம் தேதியில் இருந்து இன்று வரை நடந்த இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களில் 25295 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் 63,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது