Maatram

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

ராபா விவகாரம் குறித்த முரண், நட்பு நாடுகளுக்கு இடையேயான விரிசல்களில் மற்றுமொன்று எனத் தெரிவித்தவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். காஸாவில் போர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான மத்திய காஸாவுக்கு மக்களை இடம்பெயர செய்ய அறிவுறுத்தும் திட்டம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் பகுதிக்கும் மேற்பட்ட மக்கள் ராபாவின் தற்காலிக முகாமில் தஞ்சமடைந்துள்ள நிலையில், போரில் இருந்து மக்கள் […]

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம்  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிyில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காசாவில் தொடரும் ஐந்து மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. முந்தைய வரைவுகளை வீட்டோ செய்த இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா இந்த வரைவில் வாக்களிக்கவில்லை. மற்ற 14 உறுப்பினர்களும் இஸ்லாமிய புனித மாதமான ரமழானுக்காக “உடனடியாக போர்நிறுத்தம் கோரும்” தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்தத் தீர்மானம், “நீடித்த, நிலையான போர்நிறுத்தத்திற்கு” இட்டுச் செல்லும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது மற்றும் ஒக்டோபர் 7 […]

5-ஆவது முறையாக ரஷிய அதிபராகிறாா் புதின்

ரஷிய அதிபராக புதின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா். இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷியாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு அதிபா் புதினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது. புதினை தீவிரமாக எதிா்த்து […]

35 சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையால் கைது

மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது. கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை […]

உலகளாவிய அணு ஆயுதப் போா்: நேட்டோவுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு அளவுக்கு அதிகமாகத் தலையிட்டால் அது உலகளாவிய அணு ஆயுதப் போா் வெடிப்பதற்குக் காரணமாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இது குறித்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது: உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் பங்கேற்பு வரம்புக்குள்பட்டதாக இருக்கவேண்டும். அதனை மீறி அந்தப் போரில் அந்நாடுகள் தலையிடுவது, உலகளாவிய அணு ஆயுதப் போா் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகள் மீது […]

போரின் போக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக மாறுகிறதா?

ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி. இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் […]

ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.

கடந்த ஒரு தசாப்தமாக ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளராக செயல்பட்ட 47 வயதான அலெக்ஸி நவால்னி; பூமியின் குளிர் மிக்க வட துருவப் பகுதியில் அமைந்துள்ள ஆர்டிக் தண்டனை காலனி சிறையில் மரணம் அடைந்துள்ளதாக டாஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அலக்ஸே நவால்னி ரஷ்ய அதிபர் புதினின் தீவிர விமர்சகராகப் பார்க்கப்படுகிறார். ரஷ்ய அதிகார மையத்தின் ஊழல்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அம்பலப்படுத்தி வருகிறார். இவரது விசாரணை வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. […]

மாலத்தீவு அதிபருக்கு பெரும் சிக்கல்.. பறிபோகிறதா பதவி?

மாலத்தீவில் சீனா ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் அதிபரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது. வெறும் 5.21 லட்சம் […]

பாகிஸ்தான் முன் நாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை!

நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார். இந்த வழக்கின் பின்னணி என்ன? மார்ச் 2022-ல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் உடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடக்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாத்திற்கு அனுப்பி வைத்தார். […]

ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் – இந்திய கடற்படை விரைவு

ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, “அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி […]