சகல தமிழ்த் தேசியக்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரிதகதியில் முன்னெடுக்கவுள்ளேன்
2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும் எனவே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ் கட்சிகளும் தம் காட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன் இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் […]
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் முக்கிய உளவுத்துறை தளபதி பலி
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிரியாவுக்கான ஈரானிய புரட்சிகரக் காவலர் படையின் உளவுத் தலைவரும் மற்ற நான்கு காவலர் உறுப்பினர்களும் சனிக்கிழமை கொல்லப்பட்டனர் என்று ஈரான் கூறியது. 2011 முதல், சிரியா ஒரு இரத்தக்களரி மோதலைச் சந்தித்துள்ளது. இதில் அரை மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது, ஆனால் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிக்கும் […]
உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் இரத்து : திடீரென பறந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், பல உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு திடீரென நாடு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அவர் திடீரென நாடு திரும்பியது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, உடன் இந்திய வெளியுறவு அமைச்சர், முன்னாள் அதிபரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடிவிட்டு திடீரென நாடு திரும்பியதாக குறித்த […]
சந்திரயான்-3: விக்ரம் லாண்டரினின் உறக்கம் கலையவில்லை
இன்று (செப்டம்பர் 22 ஆம் தேதி) சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருந்தது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது.நிலாவில் சூரியன் உதித்தது. ஆனால் விக்ரம் லேண்டர் அதன் உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை.நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொண்டது. ஆனால்இ சிக்னல் கிடைக்கவில்லை. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தொடர்புகொள்ள […]