Maatram

சிஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அடி: மற்றுமொரு முக்கிய வீரர் காயம்!

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிஸ்கே அணியின் மற்றுமொரு வீரர் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது சிஸ்கே அணியின் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண விளையாடாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது தொடை தசையில் காயம் அடைந்த நட்சத்திர இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண குறைந்தது நான்கைந்து வாரங்களுக்கு விளையாடாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சிஎஸ்கே அணியின் வீரர்களான சிவம் துபே மற்றும் டெவான் கான்வே ஆகியோர் காயத்தால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏ

னெனில் 21 வயதான வேகப் பந்துவீச்சாளர் பதிரண கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கடைசி ஓவர்களில் சிறந்த பந்து வீச்சாளராக காணப்பட்டார்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இந்த முறை, அவர் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் ஆடுவதே சந்தேகமாக மாறியுள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி பதிரண குறைந்தது நான்கு முதல் ஐந்து வாரங்களுக்கு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் முதல் சில போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது. ஐபிஎல் 2024 முடிவிற்குப் பிறகு டி20 உலகக் கோப்பை 2024 நடைபெற உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியமும் அவருக்கு அனுமதி வழங்குவதற்கு முன் எச்சரிக்கையான அணுகுமுறையை கையில் எடுக்கும்.

எனவே, சிஎஸ்கே அணி அவரை மட்டுமே நம்பி இருக்க முடியாது. ஆனால் அவருக்கு பதிலாக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணியில் பந்து வீசக் கூடும் என கூறப்படுகிறது.