Maatram

உக்ரைனிற்கு பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்க தயாராகிறது அமெரிக்கா!

ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு இன்னும் வலுவான ஆயுதங்களை விரும்பும் உக்ரைனின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, அதன் அதிநவீன பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா இறுதி செய்து வருகிறது. அமெரிக்கா நாளை வியாழன் அளவில் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை வழங்குவது பற்றிய முடிவை அறிவிக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்கள் செவ்வாயன்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் ஜனாதிபதி ஜோ பிடனின் முறையான ஒப்புதலுக்காக விவகாரம் காத்திருக்கிறது. உக்ரைனிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க, தனது நாட்டிற்கு இன்னும் மேம்பட்ட ஆயுதங்களை வழங்குமாறு மேற்கத்திய தலைவர்களிடம் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தொடர்ந்து கோரி வருகிறார். பேட்ரியாட் அமைப்பை வழங்குமாறு குறிப்பாக சுட்டி கோரிக்கை விடுத்திருந்தார்.பேட்ரியாட் அமைப்பை வழங்குமாறு குறிப்பாக சுட்டி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நடவடிக்கையை யுத்த விரிவாக்கமாக ரஷ்யா கருதும்.