காசாவில் ஒரே நாளில் 24 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டனர்
திங்கட்கிழமை தெற்கு காசாவில் இடம் பெற்ற மோதலில் 24 படை வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது காசாவில் போர் மூண்டதற்க்கு பின்னர் ஒரே நாளில் அதிகபட்சமான வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும். பயங்கரவாதிகளின் கட்டுமானங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுத்த தாங்கி ஒன்றின் மீது நடாத்தப்பட்ட சுPபு தாக்குதலில் 21 வீரர்கள் பலியானதாகவும் இரண்டாவது சம்பவத்தில் கட்டிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய […]
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் முக்கிய உளவுத்துறை தளபதி பலி
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிரியாவுக்கான ஈரானிய புரட்சிகரக் காவலர் படையின் உளவுத் தலைவரும் மற்ற நான்கு காவலர் உறுப்பினர்களும் சனிக்கிழமை கொல்லப்பட்டனர் என்று ஈரான் கூறியது. 2011 முதல், சிரியா ஒரு இரத்தக்களரி மோதலைச் சந்தித்துள்ளது. இதில் அரை மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது, ஆனால் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிக்கும் […]
இஸ்ரேல் விதித்த கெடு முடிந்தது – அடுத்தது என்ன? திகிலில் உறைந்துள்ள காசா மக்கள்
கடந்த 7 அக்டோபர் 2023 அன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்தில் ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் அதே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நாட்டிற்குள்ளும் ஊடுறுவி தாக்குதல் நடத்தினர். இதில் 1,300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 150 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்ததுடன், பலரை காசாவுக்குக் கடத்திச் சென்றனர். ஹமாஸ் ஆயுதக் குழுவின் தாக்குதல் […]
முழுமையான முற்றுகைக்குள் காசா – இஸ்ரேல் அறிவிப்பு.
காசா பிரதேசத்தை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேலிய பாதுகாப்ப அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர், உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் வினயோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின் இவ் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவ் அத்யாவசியப் பொருட்களின் பெரும்பகுதி இஸ்ரேல் ஊடாகவே காசாவிற்கு இதுவரை வழங்கப் பட்டு வந்தது. இதேவேளை ஒன்பது அமரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்பட்டுள்ளது. மேலும் பத்துக்கும் அதிகமான பிரித்தானியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இசைக் நிகழ்சி ஒன்றில் […]
நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் தயார் -இஸ்ரெலிய பிரதமர்
கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேலிய விமானப்படை நடாத்தும் தாக்குதல்களில் 400 க்கும் அதிகமான பாலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடாத்தும் தாக்குதல்களில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 100 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் […]
சீக்கியர்களிடம் சிக்கியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்
ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் முதல்முறையாக கனடாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர் இந்தியாவில் மோடீ அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார். அப்போது ட்ரூடோ நான்கு சீக்கியர்களை அமைச்சரவையில் சேர்த்திருந்தார். கனடாவின் அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தது அதுவே முதல்முறை. தற்போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான கனடாவின் உறவுகள் கடுமையான சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது. காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குப் […]
இம்ரான்கானின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை நீடிப்பு
இம்ரானை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று வியாழக்கிழமை அறிவித்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கானை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, அவரது கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை, தலைமை நீதிபதி […]
‘தற்கொலை ட்ரோன்கள்’ மூலம் மீண்டும் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா .
யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. புதிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு, ரஷ்யா தொடங்கியுள்ள தாக்குதலால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வில் இரவு முழுவதும் வெடிசப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது எனக் கூறும் நகர மேயர், ரஷ்யாவின் காமிகேஸ் வகை பெரிய ட்ரோன் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் தெற்கு ஓடேசா பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், தங்களது […]
ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் .
மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான ஹிஜாப்பை கட்டாயம் அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும். இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய மஹ்சா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு காவல்துறை தாக்கியதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, நாடு முழுதும் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. நாளுக்குநாள் அதிகரித்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், ஆடை கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் […]