Maatram

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இல்லை ! – எரிக் சோல்ஹிம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹிம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தன. இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரின் ஒரு பகுதியாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது […]

மாணவர் பேரணியை குழப்ப அரச புலனாய்வு துறையினர் முயற்சி!

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுருப்பதாக தெரியவந்துள்ளது. புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரை வைத்து இந்த சதித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். பேரணியில் வருகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கு […]

சம்பந்தன் இனி கூட்டமைப்பின் தலைவர் இல்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி பறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி, ஒற்றுமையை விரும்பும் மக்களின் வெற்றியென […]

‘இலங்கை மீள ஒரே வழி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே’: எஸ்.ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இதன்போது கருத்து தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர்-இலங்கை மிக மோசமான நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. இதிலிருந்து துரிதமாக மீண்டெழவில்லையென்றால், மிகப்பெரிய நெருக்கடியை மக்கள் சந்திப்பார்கள். இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, இலங்கை முன்னேற வேண்டுமெனில் பொருளாதார வளர்ச்சி மட்டும்தான் ஒரே தீர்வு. அதற்கு, இலங்கை உள்ளக- இனப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது சிங்கள மக்களும் இனப்பிரச்சினை தீர்விற்கான சாதகமான அப்பிராயத்திற்கு வருகிறார்கள். இலங்கை […]

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து – புதிய வியூகத்துடன் களமிறங்கத் தயார்!

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர். ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. […]

முறிந்தது தேர்தல் கூட்டு: கட்சி தலைவர்களின் கருத்துக்கள்!

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைவுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு இரு தசாப்தங்களின் பின்னர் முறிவடைந்துள்ளது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தில் தனித்தே போட்டியிடுவதென பெரும்பான்மையோர் சிபார்சு செய்து ஆதரவினை வெளியிட்டிருந்த நிலையில் அதுதொடர்பில் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான கூட்டமொன்று […]

சுமந்திரன் கூறியது தவறு; புதிய கட்சிகளை இணைப்பதில்லையென முடிவெடுக்கப்படவில்லை: கே.வி.தவராசா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழரசு கட்சியின் கொழுப்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மறுத்துள்ளார். தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் நடந்த […]

தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றாலும் தமிழ் தேசிய கூட்டமை ப்பாகவே செயற்படுவோம்: பங்காளிக்கட்சிகள் அறிவிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிக ஆசனத்தை […]

கோட்டா பீதியடையாமல் இன்னும் சில நாள் சமாளித்திருந்தால் பிரச்சினையை தீர்த்திருக்கலாம்: பசில்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 90 நாள் விசாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, […]